ஜூலை 29, 1904 - நவம்பர் 29, 1993
என்னைப்போல் பல தொழில் முனைவோருக்கு இன்றைய சிறந்த வழிகாட்டி .
தன்னுடைய அசாத்திய திறமையினால் அனைத்தையும் விரைவிலேயே கற்றுக்கொண்டவர் .
தொழில் துறையின் லாபத்தை விட அதன் மீது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிறந்த மதிப்பே உயர்ந்தது என்ற உயர்ந்த கருத்தை தனது நிறுவனத்தின் மூலம் நிலைநிறுத்தியவர் .
ஒரு தொழிலில் வரும் லாபத்தை கொண்டு அடுத்த ஒரு தொழிலை உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடு்ப்பதை அவர் தனது கொள்கைகளில் ஒன்றாகவே கடைபிடித்தவர்.
உலகமே தமது தொழில்நிறுவனத்தின் மீது மதிப்பும் மரியாதையும் கொள்ளும் அளவிற்க்கு பல தொழில் வியூகங்களை அமைத்தவர் .
இந்திய தொழில் துறையில் தன்னை தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாக நிலை நிறுத்தி கொண்டவர் .
தொழில் துறையில் மட்டுமின்றி சமூக நலனிலும் இந்தியாவின் மீதும் கடைசி வரை மிகுந்த அக்கரை கொண்ட மனிதராகவே நடந்து கொண்டவர்.
சுதந்திரம் அடைந்த பிறகு உள்நாட்டு உற்பத்தி தேவை அதிகரிக்க அப்போதைய பிரதமர் நேருவுடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க செய்தவர்.
அவர்தான் J R D TATA என்று எல்லோராலும் அழைக்கபடும் ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா.
இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார் 1904 ஆம் ஆண்டு . பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார்.பிரான்சிஸ் பிறந்து பள்ளி படிப்பு அங்கே முடித்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் பட்டம் பயில வந்தஆவர் பாதியிலே அதை கைவிட்டு தனது 21ம் வயதில் டாடா ஸ்டில் நிறுவனத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து வேலை செய்தார்.
1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றவர் .
ஜே.ஆர்.டி. 1932ல் இந்தியாவில் முதன் முதலாக டாடா ஏர்லைன்ஸ் என்ற விமான சேவையை தொடக்கி அக்டோபர் 15ம்தேதி விண்ணில் பறந்தது அதை ஓட்டியவர்
திறமையான இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களை டாடாவினுள் அழைத்து வந்து அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை நம்பி ஒப்படைப்பது இதுவே அவரது பல தொழில் வளர்ச்சிக்கு வெற்றியாக அமைந்தது
வாழ்நாள் முழுவதும் .
இந்திய தொழில் துறைக்கே அவருடைய வழிகாட்டுதல் மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்திய தொழில் துறை வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்கிற்கு 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான'' பரத ரத்னா'' வழங்கபட்டது.இவிருதினை பெற்ற முதல் தொழில் அதிபர் இவர்த்தான்
டாடா என்ற ஒரு நிறுவனம் மட்டும் இந்தியாவில் இல்லையென்றால் இந்தியத் தொழில்துறை பல ஆண்டுகள் பின்னோக்கிய நிலையில் இருந்திருக்கும். அதுதான் இன்றும் டாட்டா நிறுவனத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கரணம் ..
J R D TATA தன்னுடைய 89ஆம் வயதில் 1993ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாடில் உள்ள ஜெனீவாவில் இறந்தார்.
என்றும் அன்புடன் ,
ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV
உலகமே தமது தொழில்நிறுவனத்தின் மீது மதிப்பும் மரியாதையும் கொள்ளும் அளவிற்க்கு பல தொழில் வியூகங்களை அமைத்தவர் .
ReplyDeleteஅருமையான பதிவு.
மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.