கிருஷ்ணன் பிறந்தநாளை கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி, காலாஷ்டமி, கோபால்காலா என்று நம்மால் பலவிதமாகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை, ஆவணி (ஷ்ராவண) மாசத்தில் ரோகிணி நட்சத்திரம்,மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கொண்டாடப்படுகிறது.
சூரிய சித்தாந்தம் என்ற புண்ணிய நூலில்: கலியுகம் கி.மு.3102 லிருந்து துவங்கியதாகக் கூறப்படுகிறது. பாகவதத்தில் பிரம்மன் கூறியுள்ளபடி பார்த்தால் பகவான் கிருஷ்ணர் இப்பூமியில் 125 வருடங்கள் வாழ்ந்ததாகத் தெரிகிறது.
யதுவம்ஷோ(அ)வதீர்ணஸ்ய பவத புருஷோத்தம ஷரச்சந்தம் வ்யதீயாய பஞ்சகிம்ஷாதிகம் ப்ரபோ (பாகவதம் - 11/6/2)
இதனடிப்படையில் சரியாக கணக்கிட்டால் பகவான் கிருஷ்ணர் இன்றிலிருந்து 5228வருடங்களுக்கு முன் அவதாரங்கண்டார். அதாவது கி.மு.3228 ஆம் ஆண்டு, சிராவண மாதம் தேய்பிறை எட்டாம் நாள் (பகுள அஷ்டமி) அன்று நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.
கோகுலாஷ்டமி கொண்டாடும் விதிகளின் படி, சிராவண மாஸ பகுளாஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் ஹரிஷண யோகம் ரிஷப லக்னம் சேர்ந்ததே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆகும்.
கர வருடம் ஆவணி மாதம் 4ம் தேதி, 21-08-11 ஞாயிற்றுக்கிழமை மதியம்12.09க்கு அஷ்டமி திதி துவங்கி, 22.8.2011 திங்கள் மதியம் 12.28க்கு முடிகிறது.
ரோகிணி நட்சத்திரம் 22.8.2011 திங்கள் மதியம்12.32க்கு துவங்கி 23.8.2011 செவ்வாயன்று மதியம் 2.01க்குமுடிகிறது.
ஹரிஷண யோகம் 22.8.2011 திங்கள் மதியம் துவங்கி 23.8.2011 செவ்வாயன்று மதியம் முடிகிறது.
(செவ்வாய் அன்று காலை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வழிப்பாடு மிகுந்த பயன்தரும்)
அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோஜித புத்தி (presence of mind) ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.
பூஜை முறைகள் :
நம் வீட்டைச் அலங்கரித்து , கண்ணனின் விக்ரகம் அல்லது படத்திற்கு மாலை அணிவித்து, சந்தன, குங்குமம் இட வேண்டும். அன்று கண்ணன் லீலைகளை சித்தரிக்கும் பொம்மைகளை
வைத்து வீடுகளில் கொலு பிரதானமாக இடம்பெறவேண்டும் .
கோகுலாஷ்டமி தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனை வரவேற்பது வழக்கம். வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், பாதச்சுவடுகளை மாக்கோலமாக இடுவர்.இதைப் பார்க்கும்போது, சின்னக்கண்ணன் வீட்டிற்குள் வந்து விட்டது போன்ற உணர்வு தோன்றும்.
குழந்தைகளுக்கு கண்ணன் போல் வேடமிட்டும் அவர்களின் பாதச்சுவடுகளை மாக்கோலமாக கூட இடலாம்.
இது, ஏதோ அலங்காரத்துக்காக அல்ல; இதற்கு, அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது. கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியைத் தான். ஆழ்வார்கள் கண்ணனின் திருவடியைப் பாடினர். அருணகிரிநாதர், முருகப் பெருமானின் திருவடியில், தஞ்சமடையும் பாக்கியம் கிடைக்காதா என உருகுகிறார். மாணிக்க வாசகர், தன் உள்ளம் உருக்கும் திருவாசகத்தில், "திருவடி தீட்சை தந்தவனே... எங்கே போனாய், மீண்டும் உன் திருவடி தரிசனம் எப்போது கிடைக்கும்...' எனக் கதறுகிறார். இப்படி, எந்த தெய்வத்தை வணங்குவோராக இருந்தாலும், இறைவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளவே ஆசை கொள்கின்றனர்.
ஒருவன் தவறு செய்து விட்டான். அவனை அடிக்க, பலர் ஓடி வருகின்றனர். அவன் அப்படியே தடாலென அவர்கள் கால்களில் விழுந்து விட்டால், அவர்களால் கையை ஓங்க முடிவதில்லை. "காலில் விழுந்து விட்டான்... விட்டு, விடுங்கள்...' என்கின்றனர்.
அது போல், "என் வாழ்வில் நடக்கும் இன்ப, துன்பங்களையெல்லாம் நீயே பார்த்துக் கொள் 'கிருஷ்ணா...' என்று, பகவான் காலில் விழுந்து விட்டால், அதைத்தான், "சரணாகதி தத்துவம்' என்கிறது ஆன்மிகம்.
நிவேதனங்கள்
பிரப்பம் பழம், நாவல் பழம்,அவல்,வெண்ணெய்,நாட்டுச்சர்க்கரை.
பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பகவானே தன் விருப்பத்தைக்
குறிப்பிட்டபடி துளசி இலை, ஒரு பூ, ஒரு பழம், சிறிதளவு நீர்.
நைவேத்திய பட்சணங்கள்
சுகியன்,அப்பம்,தட்டை,வெல்லச் சீடை,உப்புச் சீடை,முறுக்கு.
கிருஷ்ண ஜெயந்தியன்று, கண்ணபிரானை, ""கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா, வாசுதேவா, பாற்கடல்வாசா, சங்கர்ஷணா, புருஷோத்தமா, பாண்டுரங்கா, பார்த்தசாரதி, நரசிம்மா, அச்சுதா, ஜனார்த்தனா, ஹரி, ஸ்ரீகிருஷ்ணா'' என்ற பெயர்களால் துதிக்க வேண்டும்.
பாவம் போக்கும் கோவிந்தா !
"பார்வதி பதியே'' என்று ஒருவர் சொன்னால், மற்றவர்கள் அவளது துணைவரான சிவபெருமானை "ஹர ஹர மகாதேவ' என்று சொல்வது வழக்கம். ஆனால்,
கோவிந்தநாமத்தைச் சொல்லும்போது முதலில் சொல்பவர் "சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்' என்று கோவிந்தன் பெயரைச் சொன்னால் கேட்பவர்களும் ""கோவிந்தா கோவிந்தா'' என்று தான் சொல்வர். "சர்வத்ர' என்றால் "எல்லாக் காலத்திலும்', "எல்லா இடத்திலும்', "எங்கும்' என்பது பொருள். காணும் இடத்தில் எல்லாம் அந்த கோவிந்தனே இருக்கிறான். சர்வலோக சக்கரவர்த்தியாக இருக்கும் இறைவன், பரம எளியவனாக பசுக்கூட்டத்தோடு பால கிருஷ்ணனாக திரிந்த வேளையில் ஏற்பட்ட பெயர் "கோவிந்தன்' என்பதாகும்.
ஆலிலையில் மிதக்கும் கண்ணன்:
மகாவிஷ்ணு, குழந்தை கிருஷ்ணனாக ஆலிலையின்மீது சயனம் கொண்டிருக்ரும் காட்சி பார்ப்பவரை ஈர்க்கக் கூடியதாகும். கிருஷ்ணன் கோகுலத்திலோ, மதுராவில் ஆட்சி செய்யும்போதோ ஆலிலையில் சயனம் கொள்ளவில்லை.
மார்க்கண்டேய முனிவருக்கு, தன் மாயசக்தியைக் காட்டுவதற்காக பிரளயத்தை (உலகம் அழிவது போன்ற தோற்றம்) ஏற்படுத்தினார். அந்த பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த ஆலிலையில் குழந்தையாக தன்னை மாற்றிக் கொண்டு படுத்துக் காட்சி தந்தார். அப்போது உலகசிருஷ்டி அனைத்தும் குழந்தை பாலகிருஷ்ணனுக்குள் ஒடுங்கிக் கிடந்தது. ஆலிலைக் கண்ணனை "முக்தி தருகின்றவன்' என்னும் பொருளில் "முகுந்தன்' என பெயர் வந்தது .
தாமரைப் பூப்போன்ற தன் கால் கட்டை விரலை தாமரைப் பூப்போன்ற தன் கையினால் பிடித்து இழுத்து, வாயிதழால் சுவைத்தபடி சயனித்திருக்கும் இக்கோலத்தை வழிபட்டால் பிறவித் துன்பம் நீங்குவதோடு வைகுண்டத்திலும் வாழும் பாக்கியம் உண்டாகும். ""சாப்பிடுவது பிரம்மம். சாப்பிடப்படுவது பிரம்மம். சாப்பாடு போடுவதும் பிரம்மம்,'' என்றொரு மந்திரம் உண்டு. அந்த மந்திரத்தை மெய்ப்பிக்கும் வகையில் கண்ணனே இந்த மாயாலீலையைச் செய்து மகிழ்ந்ததாகச் சொல்வார்கள்.
கோகுலத்தின் மன்னன்:
மழைக்கடவுளான இந்திரனுக்கு ஒருமுறை தன்னால் தான் ஆயர்களும், பசுக்கூட்டங்களும் சுகமாக வாழ்கிறார்கள் என்ற கர்வம் உண்டானது. அவனுக்கு பாடம் கற்பிக்க நினைத்த கிருஷ்ணர், தான் வசித்த ஆயர்பாடியில் இருந்த மக்களிடம் இந்திரனை வழிபடாமல், தங்களுக்கு பிழைப்பு தரும் கோவர்த்தனகிரியை (மலை) வழிபடும்படி கூறினார்.
கோபம் கொண்ட இந்திரன், ஆயர்பாடியில் கடுமையாக மழை பெய்வித்தான். கிருஷ்ணர், அந்த மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும், பசுக்களையும் காப்பாற்றினார். மமதை அடங்கிய இந்திரன், கிருஷ்ணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து பிராயச் சித்தம் தேடினான். அன்றுமுதல் "கோகுலத்தின் மன்னன்' என்னும் பொருளில் கிருஷ்ணருக்கு "கோவிந்தராஜன்' என்ற பட்டம் உண்டானது. "கோவிந்தா' என உள்ளத்தூய்மையோடு, தினமும் மூன்றுமுறை சொன்னால் பாவங்கள் தொலையும் என்பார்கள் .
பார்வை ஒன்றே போதும் !
கடவுளுக்கு உருவம் கிடையாது. உருவமின்றி ஒளிவடிவாக காட்சிதரும் அவனை நாமும் அந்நிலையில் வழிபாடு செய்வது மிக உயர்ந்த நிலையாகும். ஆனால், நம்மைப் போன்ற பாமரர்களால் இவ்வாறு இறைவனை வணங்க முடியாது. எனவே தான் பகவானே நம் மத்தியில் பாலகிருஷ்ணனாக அவதரித்தான். மதுசூதன சரஸ்வதி என்னும் அடியவர் குழந்தை கண்ணன் மீது ""ஆனந்த மந்தாகினி ஸ்தோத்திரம்'' என்னும் பெயரில் நூறு ஸ்லோகங்களைப் பாடியுள்ளார்.
அதில்,"" ஞானிகள் தம் மனதை அடக்கி தங்களுக்குள் இறைனை ஜோதிவடிவில் பார்த்துவிட்டுப் போகட்டும். நம்மால் அப்படி யோகம், தவம் எல்லாம் செய்ய முடியவில்லையே என்று யாரும் வருந்த வேண்டாம். அந்த ஜோதியே நீலஒளியாக, கார்மேகவண்ணனாக, யமுனாநதிக்கரையில் ஓடி விளையாடுகிறது. அந்த கண்ணனைப் பாருங்கள். அது, நம் கண்களுக்கு ஆனந்தத்தை தருவதோடு, முக்தியையும் தந்துவிடும்'' என்கிறார். அதனால், மகான்கள் கூட கண்ணனின் வடிவழகில் மயங்கி அவனைப் போற்றியிருக்கிறார்கள். தியானம், தவம் போன்ற உயர் பக்தியைக் காட்டிலும், கண்ணனைக் காண்பதே கூட நம்மைக் கரைசேர்க்கும் என்பது மகான்களின் முடிவு.
உலகத்தை விஷ்ணுவும்,சிவனும் ஆறு ஆறு மாதமாக ரக்ஷிப்பதாக சொல்வது
வழக்கம்.கிருஷ்ணஜயந்தியிலிருந்து சிவராத்திரி வரை ஆறு மாதம் விஷ்ணுவும் சிவனும்,
சிவராத்ரி முதல் கிருஷ்ணஜயந்தி வரை ஆறுமாதம் உலகத்தை ரக்ஷிக்கிறார்கள்.
எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன், என்பது கீதைநாயகன் கிருஷ்ணரின் அருள்வாக்கு.

இப்படியொரு நிலையைச் சீர்படுத்துவதற்காக துவாபரயுகத்தில் அவர் அவதரித்தார். தர்மநெறிதவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து உலகைக் காப்பதற்காக குருசேக்ஷத்திர யுத்தத்தை நடத்தினார். முழுமுதற்கடவுளாகிய மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக வசுதேவரின் மகனாகப் பிறந்தார்.
பலன்: கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது.
ஜெயந்தி சபதம்:-
நாம் புண்ணியம் செய்தாலும், பாவம் செய்தாலும் அதற்குரிய நற்பலனை அனுபவிக்க மீண்டும் பிறவி எடுக்கத்தான் வேண்டும். அதனால் தான், விவேகானந்தர் புண்ணியத்தை தங்கச்சங்கிலி என்றும், பாவத்தை இரும்புச்சங்கிலி என்றும் குறிப்பிடுவார். தங்கமோ, இரும்போ அந்தச் சங்கிலி கைக்கு இடும் விலங்கு. அது நம்முடைய சுதந்திரத்தைப் பறிக்கத் தான் செய்யும். அதிலிருந்து தப்பிக்கும் வழி ஒன்று உண்டு.
அதுதான் "ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்'' என்பதாகும். எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை கிருஷ்ணருக்கே சமர்ப்பணம் செய்து விட வேண்டும். இதனால் பிறவித்துன்பத்தில் இருந்து விடுபடலாம். "போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!' என்ற சபதத்தை கிருஷ்ணஜெயந்தி நாளில்எடுத்துக் கொள்வோம்.
என்றும் அன்புடன் உங்கள்,
''ஸ்ரீ வைஷ்ணவன் '' ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

No comments:
Post a Comment