அந்த சிறுவனுக்கு பத்து பன்னிரெண்டு வயது இருக்கலாம். தூர்தர்ஷனில் வந்த மகாபாரத போரை, போரடித்தாலும் பார்த்துக் கொண்டிருப்பான். என்னப்பா இது? ”அம்புல இருந்து நெருப்பு வருது. தண்ணி வருது. ஒரு அம்பு விட்டா நூறா மாறுது.பல மைல் தூரம் போய் அடிக்குது. கேட்டா வரம் வாங்கியிருக்கிறான்னு சொல்றாங்க. என்றான் தன் தந்தையிடம். அவர் படித்துக் கொண்டிருந்த ஹிந்துவை மூடி வைத்துவிட்டு இவனோடு வந்தமர்ந்தார்.
தம்பி, புராணம் இதிகாசம் அதுல சொன்ன கதைகளும், இது மாதிரியான பொருட்களும் சொல்லும் விஷயம்தான் முக்கியம். அதை மட்டும் நாம் எடுத்துக்கிட்டு போயிடனும்.
புரியலையேப்பா
அதேதான் . இந்த போருல காட்டுற எல்லாமே சாத்தியம்தான். ஆனா அது எப்படி சாத்தியம்ன்றத கண்டுபிடிப்பதுதான் விஞ்ஞானம். இந்த உலகத்துல ஒரு விஷயம் எப்படி நடக்குதுன்னு தெரியற வரைக்கும் அது கடவுள் வேலை. அந்த லாஜிக்க கண்டுபுடிச்சிட்டா அறிவியல். உனக்கு இன்னும் கொஞ்ச வயசு ஆச்சுன்னா நீயே யோசிப்ப.
அந்த உரையாடல் அந்த அளவில் முடிவுற்றது. மூன்று வருடங்களுக்கு பிறகு அந்த சிறுவன் யோசிக்கத் தொடங்கினான். இன்றைய பிரபலமான கண்டுபிடிப்புகள் எல்லாவற்றுக்குமே proto டைப்பாக நம் முன்னோர்கள் கதைகளில் சொல்லியிருப்பதை உணர்ந்தான். ஏவுகணைகளும், ராக்கெட்டுகளும் செய்த வேலைகளைத்தான் பிரம்மாஸ்திரங்கள் செய்தன. சற்று கூர்ந்து கவனித்தால் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் இப்படி ஒரு ஆதர்சம் இருக்கும்.அந்தப் பையன் யாருன்னு கேட்கறீங்களா?
பிரணவ் !
உலகத்தில் இதுவரை வாழ்ந்த மூன்று சிறந்த கண்டுப்பிடிப்பாளர்களுள் " பிரணவ் " நிச்சயம் என்பது ஒரு வரி அறிமுகம். பிரணவ் பற்றி:குஜராத்தை சேர்ந்த 28 வயது பிரணவ், மும்பை I.I.T யில் பட்டம் பெற்று அமெரிக்கா சென்றவர் மைக்ரோசாப்ட்டில் சில காலம் பணிபுரிந்துள்ளார்.
இதற்கு முன்னரே 3D பேனா,குறிப்புத்தால்கணினி,பிசிக்கல் மேப் என விளையாடியவர்.அவரின் சிறந்த கண்டுப்பிடிப்பே இந்த "சிக்ஸ்த் சென்ஸ்" என்பதில் சந்தேகமே இல்லை... இந்தியாவும் இந்தியர்களும் இந்த உலகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியம். இந்தியரான ஆர்யபட்டா" பூஜ்யம் " கண்டுப்பிடித்த பிறகுதான் கணிதம் நாலுகால் பாய்ச்சலில் பரிணமித்தது.இப்போது இந்த கணினி யுகத்திலும் ஓர் இந்தியனின் கண்டுப்பிடிப்புதான் " Talk Of The World "
பிரணவ் மிஸ்ட்ரி " சிக்ஸ்த் சென்ஸ் " :-
உலகின் தலை சிறந்த அறிவியல் ஆய்வு கூடம் அமெரிக்காவின் மாசாசூட்ஸ் ஆய்வு கூடம். அங்கு அறிவியல் கண்டுப்பிடிப்புகளை வணிகரீதியில் உருவாக்குவது பற்றி ஆய்வு செய்வது எம்.ஐ.டி.பரிசோதனைக்கூடம். அதன் டக்டரடே மாணவரான பிரணவ் கண்டுப்பிடித்திருப்பதுதான் " சிக்ஸ்த் சென்ஸ் " ஆறாவது அறிவு.
கிட்டத்தட்ட மனிதனின் கைகளில் இருக்கும், மூளையின் செயல் திறனுக்கு ஒப்பான ஒரு கருவி.சிம்பிளாக ,உங்கள் உள்ளங்கையில் ஒரு லேப்டாப்பைப் புதைத்து வைத்திருப்பதற்கு ஒப்பான ஒரு டெக்னாலஜி .சுருக்கமாக " பேப்பர் லேப்டாப் " என்கிறார்கள்.
தொப்பி அல்லது கண்ணாடியில் அணிந்துகொள்ளகூடிய ஒரு கேமரா, சின்ன ப்ரொஜெக்டர்,கீ செயின் வடிவில் பாக்கெட்டுக்குள் அடங்கும் ஒரு சின்னமெசின், விரல் முனைகளில் பொருத்திகொள்ளும் வளையங்கள்.இவ்வளவுதான் " சிக்ஸ்த் சென்ஸ் "
உங்கள் கண் பார்வை பதியும் இடங்களில் லென்ஸ் பதியுமாறு அந்தக் கேமராவை பொருத்திக்கொள்ளவேண்டும்.நீங்கள் பார்க்கும் எந்த பொருள் அல்லது சம்பவம் பற்றி உங்களுக்கு தகவல் தெரிய வேண்டும் என்றாலும், விரல் சொடுக்கினால், விவரங்கள் வீடியோ வடிவில் புள்ளி விவரங்களுடன் உங்கள் உள்ளங்கையையே திரையாக்கி காட்சிகளாக விரியும்.
வெள்ளைத்தாள், சுவர்,துணி,பாலிதீன் உறை,கண்ணாடி என எதிரில் இருக்கும் எந்த பொருளின் மீதும் விவரங்களைப் புராஜெக்ட் செய்யலாம். தேவைப்படும் மாற்றங்களையும் எடிட் செய்து பதிவேற்றி உலகத்துக்கு உண்மைகள் சொல்லலாம்.கம்ப்யூட்டர் படிப்புகளில் ஊறித் திளைத்து பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் இதை பயன்படுத்தமுடியும் என்பது இல்லை. அடிப்படை ஆங்கிலம் தெரிந்த, செல்போன் இயக்கத்தெரிந்த எவரும் அதே லாவகத்தோடு இந்த " சிக்ஸ்த் சென்ஸை " பொருத்தி உபயோகபடுத்தலாம் என்பது இன்னொரு விசேஷம்.
பிரணவ் கடந்த 2009 நவம்பர் மாதம் பல மேதைகளுக்கும் , பத்திரிக்கயாளர்களுக்கும் முன் இதனை செயல்முறை படுத்தியும் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் .
http://www.ted.com/talks/lang/eng/pranav_mistry_the_thrilling_potential_of_sixthsense_technology.html
புரொஜெக்டர்,கேமரா சென்ஸார்,எல்லாம் முந்தியே இருக்கிறதுதானே,அந்த மூன்றையும் ஒருங்கினைத்திருகிறான்,இதற்கு ஏன் இத்தனை உற்சாகக் கூக்குரல் எனக் கேட்கும் ஜீனியஸ்களே.
ஒரு நிமிடம், தரமான நிறுவனத்தின் மிகக் குறைந்தபட்ச நினைவு திறன், வேகம் கொண்ட ஒரு மேசை கணினியின் விலையே குறைந்த பட்சம்
20 ஆயிரத்தில் இருந்துதான்துவங்கும்.
ஆனால் கிட்டத்தட்ட உலகத்தையே உள்ளங்கையில் அடக்கும் இந்த " சிக்ஸ்த் சென்சின் " விலை 15 ஆயிரத்துக்குள்தான்.அதிலும் அந்த "சிக்ஸ்த் சென்சின்" ரகசியத்தை உலகத்துக்கு இலவசமாக அளிக்க போகிறேன் என்று பிரணாவ் அறிவித்திருப்பதுதான் சிலிக்கன் வேலியின் இன்றைய நம்பமுடியாத பர பர விவாதம்.
விண்டோஸ் என்ற ஒற்றை மென்பொருள் மூலம் பில் கேட்ஸ் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனதுபோல,இந்த சிக்ஸ்த் சென்ஸ் மூலம் பிரணாவ் அவரைகாட்டிலும் கோடிகளில் டாலர்களை குவிக்கலாம்.அந்த வாய்ப்பைத்தான் " ஜஸ்ட் லைக் தட் " உதாசீனப்படுத்தீருக்கிறார் பிரணாவ்.
உலகின் போக்கை தீர்மானிக்கும் மல்டி நேசனல் நிறுவனங்கள் இந்த சிக்ஸ்த் சென்ஸை என்னிடம் விலை பேசின..ஆனால் சிக்ஸ்த் சென்ஸை உலகின் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதுதான் என் கனவு.
அதை சாத்தியப்படுத்தும் ஆசையுள்ள எவருடனும் கைகோர்க்க ஆவலாக உள்ளேன்.
இந்திய அரசாங்கம் ஆர்வம் காட்டினால் முதல் முன்னுரிமை அவர்களுக்குதான் என்று அறிவித்துள்ளார் பிரணாவ் சபாஸ்.
அன்புடன் உங்கள்
ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV



ஓ, அவரு தான் இவரா. உண்மையிலேயே "அதிசயமே வியந்து போகும் பிரணவ்" ஒரு எட்டாவது அதிசயம் தான்...!
ReplyDeleteவாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாம் ஓர் பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த மஹாத்மாக்களைப் போல் தேசப்பற்று மிக்க நீவிர் வாழ்க வாழ்க!...
நன்றி RSN அண்ணா .
ReplyDeleteஏழாம் அறிவை நோக்கி என் பயணம்.
ReplyDeleteஅருமையான செய்திகள் நிறைந்த பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.