Sunday, August 7, 2011

அப்பல்லோ 13



Crew :-

 

Commander - David R. Scott Third spaceflight

Command Module Pilot - Alfred M. Worden Only spaceflight

Lunar Module Pilot - James B. Irwin Only spaceflight 



Backup crew

Commander - Richard F. Gordon, Jr.

Command Module Pilot - Vance D. Brand

Lunar Module Pilot - Harrison H. Schmitt

"அப்பல்லோ 15 "
ஜூலை  26, 1971, அபோல்லோ இறக்கம் நிலவிற்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது .


 ஜூலை  30  அன்று  நிலவில் இறங்கிய  ஸ்காட்ட் பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட ரோவர் வாகனத்தை நிலவில் ஒட்டியதன் மூலம் நிலவில் வாகனம் ஒட்டிய  முதல் மனிதர் என்ற சாதனைக்கு சொந்தகாரர் ஆனார் . பின் ஆகஸ்ட் 7 புவிக்கு வந்து சேர்ந்தனர் .
 
                              அன்புடன் உங்கள் ,


நீல் ஆம்ஸ்ட்ராங் ’அப்பல்லோ 11’ செயல்திட்டத்தில் நிலவை அடைந்து, அதன் தரையில் கால் வைத்தது நம் எல்லோருக்கும் தெரியும். அதற்கு அடுத்த 'அப்பல்லோ 12 ' செயல்திட்டத்தில் நிலவை அடைந்து, அதுவும் வெறி அடைந்தபின் .
 

 'அப்பல்லோ 13’அடுத்த அனுப்பப்பட்ட இறக்கம் . ஆனால் ’அப்பல்லோ 13’க்கு நடந்த விபத்து ஒரு சிலருக்குத்தான் இப்பொழுது நினைவிருக்கும். ”வெற்றிகரமான தோல்வி” என்று அழைக்கப்படும் இந்த திட்டம், அமெரிக்க விண்வெளி சரித்திரத்தில் ஒரு முக்கியமான கட்டம்.

பூமியிலிருந்து கிளம்பி மூன்றாவது நாள் பிரயாணத்தின் பொழுது, ஆக்ஸிஜன் டாங்குகளில் வெடிப்பு ஏற்பட, பிரச்சனை ஆரம்பமானது. விண்கலத்தின் கமாண்டர் ஜேம்ஸ் லோவல்(James A. Lovell) பின்னாளில் மிகப் பிரபலமடைந்த அந்த வார்த்தைகளை கூறினார், “Houston, we've had a problem".

ஆக்ஸிஜனையும் ஹைட்ரஜனையும் இணைத்து கலத்துக்கு தேவையான நீரும், மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். இப்பொழுது ஆக்ஸிஜன் சப்ளை காலியாவதால், முக்கியத் தேவையான மின்சாரம் பற்றாக்குறையானது. மின்சாரப் பற்றாக்குறை முதலாவதாக தலைதூக்க, பிரயாணிகள் முக்கியத் தாய்க்கலமான “ஒடிஸி”யை(Odyssey) shutdown செய்து விட்டு, நிலவில் இறங்குவதற்கு உபயோகிக்கும் கலமான ”அக்வாரிஸ்”(Aquarius) கலத்திற்குள் நுழைந்தனர்.

இந்த நிலையில், செயல்திட்டத்தின்படி நிலவில் கலத்தை இறக்க முடியாது. பூமியில் நாஸா விண்வெளி நிலையத்தில், அப்பல்லோ 13 திட்டத்திற்காக இதுவரை வேலை செய்த அனைவரும் தட்டியெழுப்பப்படுகின்றனர். பூமிக்கும் நிலவுக்கும் இடையே கிட்டத்தட்ட முக்கால்வாசி தூரத்தில் மூன்று உயிர்கள் விண்வெளியில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. அப்படியே ராக்கெட்டை இயக்கி கலத்தை திருப்பி பூமிக்கு திருப்பி விடலாமா?

ஆக்ஸிஜன், கலத்தின் எரிபொருளுக்கும் தேவை. நடுவழியில் கலத்தை திருப்பினால், செலவாகும் எரிபொருள், கடைசி நேர எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். அதனால் கலத்தை, நிலவை நோக்கியே பயணிக்க தீர்மானிக்கின்றனர். இதன் மூலம், நிலவின் ஈர்ப்பு சக்தி, கலத்தை, நிலவை சுற்றி திருப்பிவிடும் சுற்றுப்பாதையில்(free return trajectory) கலம் நுழைந்தது.



நிலவைச் சுற்றிக்கொண்டு, கலம் பூமியை நோக்கி திரும்பியதும், நிலவின் ஈர்ப்பிலிருந்து விடுபட அக்வாரிஸ்(Lunar Module - Aquaris) கலத்தின் ராக்கெட்டுகளே எரிந்தன. தாய்க் கலத்தின் ராக்கெட்டுகள் எந்த நிலையில் இருக்கிறதோ என்று பயம்!

பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. மின்சாரச் சிக்கனம் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. கலத்தினுள்ளே விளக்குகளிலிருந்து, கலத்தை வெப்பமாக்கும் ஹீட்டர் வரை அனைத்தும் அணைக்கப்படுகின்றன - கணிணியும் சேர்த்து. பூமியுடனான ரேடியோ தொடர்பு மட்டுமே உயிருடன் இருக்கிறது. கலத்தினுள்ளே தாங்க முடியாத குளிர். இருக்கிற மின்சார சக்தியை கொண்டு பூமிக்கு பத்திரமாக திரும்ப முடியுமா என்று சந்தேகம். மின்சார சாதனங்கள் அணைக்கப்பட்டதால், கழிவுகளை கலத்திலிருந்து வெளியேற்ற முடியாது. அதனால், இனிமேல் கழிவுகள் கூடாது என்று பூமியிலிருந்து ஆணை கிளம்பியது. No Ones and Twos!!

அக்வாரிஸ் கலம் நிலவில் இறங்குவதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டிருந்ததால், பிரயாணிகள் சுவாசித்த பின் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கான வசதி, இரண்டு பேருக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இப்பொழுது இருப்பதோ மூன்று பேர். என்ன செய்வது? பூமி விஞ்ஞானிகள், கலத்திலிருக்கும் பொருள்களை கொண்டே கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் கருவியை செய்யும் முறையை கண்டுபிடித்து, பிரயாணிகளுக்கு சொல்லச் சொல்ல கருவி கலத்தில் தயாரிக்கப்பட்டது.

விபத்தில் நடந்த வெடிப்பில், அதிக வெப்பம் தாங்கும் கூடு(Heat Sheild) பாதிக்கப்பட்டதாக சந்தேகித்தனர். அப்படி பாதிக்கப்பட்டிருந்தால், பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்தபின், ஏற்படும் அபரிமிதமான உராய்வினால் ஏற்படும் வெப்பத்தை தாங்கமுடியாமல் பிரயாணிகள் இறக்க நேரிடும்.

இவ்வளவு தடைகளையும் தாண்டி இறுதியில் பிரயாணிகள் இருந்த கூடு, கடலில் பத்திரமாக இறங்கியது. செயல்திட்டத்தின்படி நிலவை அடைய முடியவிட்டாலும், பிரயாணிகளை பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்ததால் இந்த சம்பவம் வெற்றிகரமான தோல்வி என்று அழைக்கப்படுகிறது.





இந்த சம்பவங்களையெல்லாம் அப்பல்லோ 13 திட்டத்தின் கமாண்டர் ஜேம்ஸ் லோவல் தனது புத்தகமான "Lost Moon" என்ற புத்தகத்தில் விரிவாகவும், துல்லியமாகவும் விவரித்திருக்கிறார். அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, 70களில் அப்போதைய தினமணி ஆசிரியர், தமிழில் இந்த வரலாற்று சம்பவத்தை புத்தகமாக எழுதினார். அந்த புத்தகத்தின் விலை அப்பொழுது ரூ.2.



'அப்பல்லோ 13 ' உபரி தகவல்கள் :-



இந்த சம்பவத்தை Ron Howard என்ற ஹாலிவுட் டைரக்டர் 1995ல் திரைப்படமாக எடுத்தார் - ஜேம்ஸ் லோவலின் உதவியோடு. Tom Hanks லோவலாக நடித்தார். திரைப்படத்துக்காக கொஞ்சம் டென்ஷன், சென்டிமெண்ட் சேர்த்திருக்கிறார்கள். இருந்தாலும் அற்புதமாக படமெடுத்திருக்கிறார்கள். லோவல் பிரயாணத்துக்கு கிளம்பும் நேரத்தில், அவர் மனைவியின் திருமண மோதிரம் பாத்ரூம் குழாய்க்குள் விழுவது, நம்மூர் தாலி சென்டிமெண்டை நினைவுபடுத்துகிறது. ஆனாலும் அது உண்மையில் நடந்த சம்பவம் என்று லோவல் உறுதிப்படுத்துகிறார்.

விஷயம் தெரிந்த ஆசாமிகள், ஒருசில தொழில்நுட்ப விவரணைகள் தவறாயிருந்தாலும், இந்தப் படத்தில் கூறப்படும்/காட்டப்படும் தொழில்நுட்ப விவரங்கள் மிகப் பெருமளவு துல்லியமாக இருப்பதாகக் கூறுகின்றனர். இந்தப் படத்துக்கு இரு ஆஸ்கர் அவார்டுகளும் கிடைத்தன.


படத்தை எடுத்து முடித்ததும், டைரக்டர் Howard ஒரு test preview showக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த ஷோவை பார்த்தவர்களில் ஒருவர் எழுதிய கமெண்ட் “அப்பட்டமான ஹாலிவுட் படம். உண்மையில் இப்படி நடந்தால் விண்வெளி வீரர்கள் உயிருடன் தப்பிக்க முடியாது”, என்பது.

                                               
                                        அன்புடன் உங்கள் ,

 

No comments:

Post a Comment