( ஜூலை 23 1856 –ஆகஸ்ட் 1 1920),
பால கங்காதர திலகர், இந்தியாவின் மகாராட்டிரத்தின் ரத்தினகிரியில் உள்ள "மதாலி அலீயில்" பிறந்தார். நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மராத்தி சித்பவன் பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவர், 1877 ஆம் ஆண்டில் பூனாவில் உள்ள டெக்கன் கல்லூரியில் கல்வி கற்றுப் பட்டம் பெற்றார். முதலில் பூனாவில் இருந்த ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியில் சேர்ந்த திலக் பின்னர் ஒரு பத்திரிகையாளர் ஆனார். இவர் மேனாட்டுக் கல்வி முறையைக் கடுமையாகச் சாடி வந்தார். அம் முறை இந்தியப் பண்பாட்டை அவமதித்ததாக அவர் கருதினார். இவர் இந்திய இளைஞர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காகத் தக்காணக் கல்விச் சபையை நிறுவினார். இவர் பெர்கூசன் கல்லூரியில் கணிதமும் கற்பித்து வந்தார்.
திலகர் ஒரு இந்தியத் தேசியவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும் திகழ்ந்தார் .
இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது.
என் நாடு அடிமைப்பட்டுக் துன்புற்றுக் கிடக்கின்றது. சுதந்திர தாகத்தால் தவிக்கும் என் மக்கள் அன்னிய ஆதிக்கத் தால் சட்டமல்லாத சட்டத்தின் கீழ் அடிக்கடி கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு வாடு கின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை விடுவிக் கத் தக்கவர்களான தேச பக்தி மிகுந்த வழக்குறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. என் மக்களையும், தேசத்தையும் காப்பாற்றவேண்டுமானால் நான் சட்ட நுணுக்கங்களையெல்லாம் கற்ற சட்ட நிபுணனாகவேண்டும். அந்த ஒரே காரணத்துக்காகவே நான் சட்டம் பயில வேண்டும் என்ற தான் கொண்ட வைராக்கியத்தின்படியே சட்ட வல்லுனனாகிப் பல தேச பக்தர்களுக்காக வாதாடி அவர்களைச் சிறை யிலிருந்து மீட்டார். தன் நாட்டு மக்கள் மனத்தில் சுதந்திரக் கனலை மூண்டெரியச் செய்தார் .
ஆங்கில அரசின் பல கொடுமைகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டுகாட்ட விரும்பிய திலக், ஒத்த கருத்துடைய கோபால் கனேஷ் அகர்கர் மற்றும் விஷ்னுசாஸ்த்திரி சிப்புல்கர் ஆகிய இருவருடன் இணைந்து 1880ல் கேசரி என்ற மராட்டிய பத்திரிகையையும் 1881ல் மராட்டா என்ற ஆங்கில இதழையும் துவக்கினார். சிறந்த ஒரு பத்திரிகையாக 130 வருடமாகத் தொடர்ந்து வெளிவரும் கேசரி இன்றும் மராட்டிய வாசகர்களின் அபிமான இதழாகும். சிங்கம் என்ற பொருள் தரும் கேசரி இதழ் ஆங்கில அரசின் அக்கிரமங்களை கடுமையாக விமர்ச்சித்து சிங்கம் போல் கர்ஜனை செய்தது.
மக்கள் பிரச்சனைகளை எழுதும்போது அவர்கள் அறிந்த மொழியில், அவர்களுக்கு புரியும்படி, எளிய நடையில் எழுத வேண்டும் என்ற திலகரின் கொள்கையால் கேசரி தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே எல்லா இந்திய மொழி பத்திரிகைகளை விட அதிகம் விற்பனையாகும் இதழ் என்ற சிறப்பை பெற்றது.
1896ல் மும்பையில் ஆரம்பித்த பிளேக் நோய் மெல்ல மெல்ல பூணே நகரையும் தாக்கியது. 1897க்குள் பலரது சாவுக்கு வழிவகுத்த இந்த நோயை சரியான முறையில் கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டனம் செய்த திலக் ஆத்திரம்படும்படி ஆங்கில அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது.
W.C. Rand என்ற அதிகாரியின் கீழ் செயல்பட்ட நிவாரண குழு, இந்திய மக்களிடம் நாகரீகமாக நடந்து கொண்டதாகவும் அவர்களது மத உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து செயல்பட்டதாகவும் உண்மைக்கு மாறாக அபாண்டமாக பொய் புரட்டாக வெளியிட்ட அரசு அறிக்கை, தவறானது என்று குற்றம் சாட்டிய திலக் அதிகாரிகள் கடமை என்ற பெயரில் செய்தகாலித்தனம்,
ஏழை இந்து மக்கள் பட்ட துயரம் ஆகியவைகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.
கொடுமை செய்பவர்களை அழிப்பது பாவம் இல்லை என்று பகவத்கீதையை மேற்கோள்காட்டி இவர் எழுதிய கட்டுரை ஆங்கில அரசை அரள வைத்தது. இந்திய அமைதியின்மையின் தந்தை என இவரை விமர்சித்த (Father of Indian unrest) அரசு, இவரது எழுத்தினால் ஆவேசம் கொண்டு கொடுங்கோலன் ராண்ட் கொலையுண்ட வழக்கின் முக்கிய குற்றவாளியாக இவர்மீது குற்றம்சாட்டி 18 மாத சிறை தண்டனை அளித்தது.
இந்திய பாரம்பரிய வழக்கங்கள் கால மாற்றங்களுக்கு ஏற்ப மாறுவது அவசியம் என்றாலும் அதில் தலையிட்டு சட்டம் இயற்றும் உரிமை வேற்று நாட்டு ஆங்கில அரசுக்கு இல்லை என்ற உயரிய கொள்கையை திலக் கொண்டிருந்தார்.
இம்மகானை இந்நாளில் நினைவு கூறுவோம்.
அன்புடன் உங்கள்,
ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

No comments:
Post a Comment