ஆர். வெங்கட்ராமன் (டிசம்பர் 6, 1919 - ஆகஸ்ட் 29, 2008)
தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1918-ம் ஆண்டு டிசம்பர் மாதம்,6-ம் தேதி ராமையா-சீதாலஷ்மி தம்பதியருக்குப் மகனாக பிறந்தார் ஆர். வெங்கட்ராமன் பிற்காலத்தில், அன்புடன் தமிழ் பத்திரிகை உலகால் ஆர்வி என்று அழைக்கப்பட்டவர்
1941-ல் தனிநபர் சத்தியாகிரத்தில் பங்கு கொண்டு கைதாகி, பாபநாசத்தில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார் ஆர்வி.
1942 இல் சென்னை வந்த பின்பு மயிலாப்பூரில் இருந்த ''கலைமகள்'' காரியாலயத்தில் கி. வா. ஜகந்நாதனைச் சந்தித்து பத்திரிகைத் துறையில் தனக்கிருந்த ஈடுபாட்டைக் கூறினார்.பத்திரிகைக்கு வரும் கதைகளைப் பதிவு செய்வதோடு அவற்றைப் படித்துவிட்டு, தேறக்கூடிய கதைகளை ஆசிரியரின் பார்வைக்காக எடுத்து வைக்கும் வேலையை முதலில் தந்தார்கள்.
அதைத் தொடர்ந்து 1950 இல் சிறுவருக்கென்று கண்ணன் பத்திரிகையும் தொடங்கப்பட்டு அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். "கண்ணனில்" ஆர்வி ஏராளமான சிறுகதைகளையும், சித்திரக்கதைகளையும், தொடர்கதைகளையும் மற்றும் புதினக்களையும் எழுதினார். இவரின் எழுத்துக்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இவரது புதினங்கள் கல்கி, சுதேசமித்திரன் ஆகிய வார இதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. இவரது மிகச் சிறந்த நாவல்கள் என்று பலராலும் பாராட்டப் பெற்ற அணையா விளக்கு, திரைக்குப் பின், ஆதித்தன் காதல் போன்ற நாவல்கள் சுதேசமித்திரனில் வெளியானது. பதினெட்டுக்கு மேற்பட்ட நாவல்கள், பதினான்கு சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர்களுக்காக பத்துக்கு மேற்பட்ட புதினங்கள், பதினைந்துக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு மொழி பெயர்ப்பு நூல்கள், பதினைந்துக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள், கட்டுரைகள் என எழுதிக் குவித்திருக்கிறார் ஆர்வி.
ஆர்வி அவர்களின் எழுத்தை இன்று படித்தாலும் ஆச்சரியமாக இருக்கும் . அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், அழகு தமிழில் நாம் எளிதாக புரியும்படியான மென்மையான உரையாடல்கள் மூலம் கதைகளை நகர்த்திச் செல்லும் பாங்கே தனித்தான் கொஞ்சம் கூடச் சலிப்பேற்படுத்தாத ஆர்ப்பாட்டமில்லாத அர்த்தமுள்ள வார்த்தை லாகவம்; புன்முறுவல் பூக்கவைக்கும் சொல்லாடல்கள்; சுருக்கமாகச் சொன்னால், தமிழ்மொழியின் சகல சிறப்புகளையும் பளீரிடும் வகையிலான நடையழகுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் ஆர்வி.
பொழுது போக்குக்காகவும், அல்லது மொழிமேல் இருக்கும் ஆளுமைக்காகவும் எழுத்தாளர் ஆனவர்கள் உண்டு.சிலருக்கு நிரந்தர வருமானம் கொடுக்கக்கூடிய வேறு தொழில்கள் இருக்கும். ஆனால் ஆர்வி அவர்கள் அப்படிப்பட்டவர் இல்லை.
பாரதி சொன்னது போல, 'எழுத்து எமக்குத் தொழில்' என்று ஒரு குடும்பத்தையும் நடத்திக்கொண்டு எழுத்தை நம்பியே வாழ்ந்து காட்டியவர். முப்பத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக 'கலைமகள்' பத்திரிகைக் குழுமத்தில் ஒருவராய் இருந்ததோடு, கலைமகள் வெளியீடான 'கண்ணன்' சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர் .
அவர் எழுத்து 'தமிழால் எதையும் சாதிக்கமுடியும்' என்று சாதித்த எழுத்து.கலைமகள் அவருக்கு அப்படி ஒரு வரம் கொடுத்து இருந்தாள். அதற்கேற்ப 'கலைமகள்' பத்திரிகைக் குழுமம் அவருக்கு எல்லா பத்திரிகையிலும் ஏழுத முழுச்சுதந்திரம் கொடுத்திருந்தது. அரைநூற்றாண்டுக்கு முன்னால் ஒரே நேரத்தில் நாலைந்து பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிய ஒரே எழுத்தாளர் ஆர்வியாகத்தான் இருக்க முடியும். " "கண்ணன்" சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து சிறுவர் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது.
இன்று பிரபலமாகத் திகழும் பலருக்கும் குழந்தைக் கவிஞர் பலருக்கும் ஆரம்பப்பள்ளிக்கூடம் "கண்ணன்" தான்! தமது ஆசிரியர் பணியில் எத்தனை எத்தனை இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, உற்சாக மூடடி, தட்டிக்கொடுத்து, பாராட்டி எழுத்துலகத்திற்கு அறிமுகப்படுத்தி ஆசிர்வதித்திருக்கிறார் தெரியுமா ?
இளையவன், மாயூரன் குருமூர்த்தி, அம்பை, சரஸ்வதி ராமநாதன், ஜெயலஷ்மி, லெமன், ஜே.எம்.சாலி, இலக்கியவீதி இனியவன், ரமணீயன், டாக்டர் ஹரிஹரன் (ரேவதி), ஜோதிர்லதாகிரிஜா,தங்கமணி, தே.பார்த்தசாரதி, டி.கே.ஜெயராமன என்று பட்டியல் நீளும்............
இவர் ஆசிரியராய் இருந்த 'கண்ணன்' பத்திரிகையில் எழுத்துலக ஜாம்பவான்கள் கிட்டதட்ட அத்தனை பேரும் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்கள்.
திருவாளர்கள் இராஜாஜி, சி.சுப்ரமணியம், பக்தவத்சலம், ஆர்.வெங்கட்ராமன், மு.வ., கவிமணி, கி.வாஜ.,கி.சந்திரசேகரன், வாரியார் பெ.நா.அப்புஸ்வாமி, அழ.வள்ளியப்பா, அம்பை, ஆதவன், சபாநாயகம், சுறாமீன் ராமநாதன், சுகி சுப்ரமணியன், ச.கு.கணபதி, சரஸ்வதி, குகப்பிரியை,கொத்தமங்கலம் சுப்பு, தம்பி சீனிவாசன், ராஜ சூடாமணி, கவிஞர் தமிழ் ஒளி, கே.பி.நீலமணி, மண.அரங்கசாமி, கிருஷணன் நம்பி, ராது, கி.ரா., ஜே.எம்.சாலி, புவனைக்கலைச்செழியன் என்று பட்டியல் நீண்டு கொண்டே போவதைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.
ஆர்வி எழுதியதில், கல்கியில் தொடராக வந்த 'தேன்கூடு', 'காணிக்கை', சுதேசமித்திரனில் தொடராக வந்த 'திரைக்குப்பின்', 'அணையாவிளக்கு', மேம்பாலம், முகராசி, சொப்பனவாழ்க்கை, பனிமதிப்பாவை', 'மனிதநிழல்கள்',சந்தனப்பேழை', 'யெளவனமயக்கம்', 'வெளிவேஷங்கள்', 'லீடர் மணி', 'சந்திரகிரி கோட்டை', 'அசட்டுப் பிச்சு', 'காலக்கப்பல்', 'அலை ஓய்ந்தது' மற்றும் காவிரிபூம்பட்டினம் தொடர்பாக எழுதிய 'இருளில் ஒரு தாரகை', பல்லவ பிற்கால சோழர் காலத்தை ஒட்டி எழுதப்பெற்ற 'ஆதித்தன் காதலி'-- ஆகிய நாவல்கள் ஆகும் .
இவரது 'குங்குமச்சிமிழ்' சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பாக தமிழ்நாடு அரசு பரிசளித்துப் பெருமைப்பட்டிருக்கிறது. 'இலக்கிய சிந்தனை' பரிசு, கம்பன்விழாவில் பொற்கிழி என்று பரிசுகள், பாராட்டுகள் !
ஒரு எழுத்தாளருக்கு ஒரு நூல் மணிமகுடம் என்பார்களே ! அப்படி ஆர்வி என்றவுடன் விமர்சகர்கள் குறிப்பிடும் நூல்,'அணையாவிளக்கு'.
இவரும்,'மோகமுள்' தி.ஜானகிராமனும் பால்ய காலத்திலிருந்து நண்பர்கள். ஆர்வியின் எழுத்து லாகவத்தைக் கண்டு தி.ஜா.வுக்கு அவர்மீது மிகுந்த பாசம். தி.ஜா. சென்னை தவிர்த்து வேறு எந்த ஊரில் இருந்தாலும், பிற்காலத்தில் டில்லியில் இருந்த போதும், ஆர்வியின் ஒவ்வொரு நாவலையும் பாராட்டி உடனுக்குடன் கடிதம் எழுதிவிடுவாராம்.
பதினெட்டுக்கு மேற்பட்ட நாவல்கள், பதினாங்கு சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர்களுக்காக பத்துக்கு மேற்பட்ட புதினங்கள்,பதினைந்துக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு மொழிபெயர்பு நூல்கள், பதினைந்துக்கு மேலான ரேடியோ நாடகங்கள் கட்டுரைகள் என்று நிறைய எழுதிக்குவித்திருக்கிறார்.வானதிப் பதிப்பகம் இவரது நூல்களை வெளியிட்டிருக்கிறது.
1946-ல் கல்கி தலைவராய், ஆர்வி செயலாளராருமாய் தமிழ் எழுத்தாளர் சங்கம் துவக்கியது,
1960-ல் தி,ஜானகிராமன், கி.ரா., ந.சிதம்பர சுப்ரமணியன், தி.ஜ.ர., க.சோமசுந்திரம், நாரண துரைக்கண்ணன் ஆகியோரைக் கூட்டி தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியது, குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி அன்றைய துணை குடியரசுத் தலைவர் மேதகு ஜாகிர்ஹூசேன் அவர்களைக் கொண்டு மூன்றாவது குழந்தை இலக்கிய மாநாட்டைத் தொடங்கச் செய்தது,சென்னையில் தேசிய பத்திரிகையாளர் சங்கத்தை அரும்பாடுபட்டுத் தொடங்கியது,இந்திய எழுத்தாளர் அமைப்பின் சென்னைக்கிளை உருவாக செயல்பட்டு, அதன் செயல் உறுப்பினராய் பணியாற்றியது, என்று எழுத்து, மொழிவளர்ச்சி தொடர்பாக எத்தனையோ பணிகள்
எல்லாவற்றையும் தன் துறைசார்ந்த பணிக்கடமைகள் என்று செய்து முடித்து, வெகுசாதாரணமாய் வாழ்ந்தவர்
ஆர்வி, அவர்கள் அவரது கடைசி காலத்தில் அவரது மாம்பலம் வீட்டில் நித்யானுஷடானங்களைச் செய்து கொண்டு அவர் உண்டு அவர் குடியிருப்பின் முன் இருக்கும் அவர் கட்டிய பிள்ளையார் கோயில் உண்டு என்று , வெள்ளை மனத்துடன் 'நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்' அதற்கும் ஒரு வரம் வேண்டும்.
ஆர்வி அவர்களிடம் அவர் எழுதியதில் ஒரு நாவல் கூட கடைசி காலத்தில் அவர் கையில் இல்லை என்பது நம் மனதை கலக்கும் ஒரு விஷயம்.
ஆர்வி அவர்களின் சிறுவர் இலக்கியப் புதினங்களை விரிவாக ஆய்வு செய்து 'சிறுவர் இலக்கியத்தில் ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்' என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார். ஆர்வி எழுத்துலகத்திற்கு அறிமுகப்படுத்தி ஆசிர்வதித்த "ரேவதி" என்ற புனைபெயரில் குழந்தைகளுக்கான ஏராளமான கதைகளையும், நாவல்களையும் எழுதிய குழந்தை எழுத்தாளர் ஈ. எஸ். ஹரிஹரன்.
''முடிந்தால் நீங்களும் அந்த புத்தகத்தை வாங்கி படித்து பாருங்கள் நண்பர்களே''
''கலைமகள் புதல்வனே வாழ்க உன் புகழ் ''
என்றும் அன்புடன் ,
ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

No comments:
Post a Comment