Sunday, August 7, 2011

அப்பல்லோ 11

ஆங்கிலத்தில் நிலாவை "லூனார்' என்று குறிப்பிடுகிறார்கள். லூனார் என்ற சொல், லத்தீன் மொழியில் நிலாவைக் குறிப்பதாகும். பூமியின் அருகில் உள்ள துணைக் கோள்தான் நிலா. பூமி, சூரியனைச் சுற்றிவர 365 1/4 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. நிலா, பூமியைச் சுற்றி வர 29 1/2 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. இந்த 29 1/2 நாள்களைச் சேர்த்து "லூனார் மாதம்' என்று அழைக்கப்படுகிறது.

 இரவில் பளிச்சென்று பிரகாசிக்கும் நிலவு, உண்மையில் தன்னுடைய ஒளியை பூமிக்குத் தரவில்லை. சூரியனுடைய ஒளியைத்தான் பிரதிபலிக்கிறது. பூமியைச் சுற்றிவரும் சுழற்சிக்கேற்ப அமாவாசை, பிறை நிலா, அரை வட்ட நிலா, முழு நிலா என்றழைக்கப்படும் பெüர்ணமி எனப் பல்வேறு தோற்ற வேறுபாடுகளை அடைகிறது. இவ்வாறு நிலா பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை வளர்ந்து பின்பு தேய்வதை வைத்து நாள்களைக் கணக்கிடும் முறைக்கு "லூனார் மாதம்' என்று பெயர் வைத்தார்கள், முற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள். இதைக் கொண்டு காலத்தையும் நேரத்தையும் கணித்தனர்.

 எகிப்தியர்கள் சந்திரனை "தாத்' கடவுளாக வணங்கினர். கிரேக்கர்கள் பெண் கடவுள் பெயரான "போபியா' அல்லது "சிந்தியா' எனப் பெயரிட்டு வணங்கி வந்தனர். பழங்கால மக்கள் சூரியக் கடவுள் பொற்தேரில் செல்வதாகவும் இரவில் சந்திரக் கடவுள் வெள்ளி ரதத்தில் பவனி வருவதாகவும் நினைத்து வணங்கி வந்தனர்.  ரோமானியர்கள் நிலாவைப் பெண் கடவுளாகக் கருதி, "டயானா' என்று பெயரிட்டு வணங்கினர். டயானா, சூரியக் கடவுளான அப்போலோவின் தங்கையாகக் கருதப்பட்டாள்.

முழு நிலவு தினமான பெüர்ணமி அன்று துர்தேவதைகளும், சூனியக்காரிகளும், கொடூர ஓநாய்களும் இரவு நேரத்தில் வலம் வரும் என்று பல கற்பனைக் கதைகள் உலா வந்தன. ஆனால் இந்த கற்பனைக் கதைகளை எல்லாம் தகர்க்கும் விதமாக, 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி அன்று சரியாக இரவு 10.56 மணிக்கு அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் காலடி எடுத்துவைத்தார்.

1969ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்கா அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்ற விண்வெளி நிபுணர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று பேர் 4 நாட்கள் பயணம் செய்து நிலவை அடைந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங்கும், எட்வின் ஆல்ட்ரினும் தனி விண் வாகனத்தின் மூலம் விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவிற்குச் சென்று இறங்கினர்.



 நீல் ஆம்ஸ்ட்ராங்கும், எட்வின் ஆல்ட்ரினும் தங்களது விண் வாகனத்தில் நிலவில் இறங்கி கால் பதித்து சிறிது தூரம் நடந்து ஒரு புது அனுபவத்தைப் பெற்றனர்.நிலவின் ஈர்ப்பு சக்திக்கு ஈடு கொடுக்கமுடியாமல் மெதுவாக ஒரு கங்காருவைப் போல இங்கும் அங்கும் தாவினார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்டிரினும்... இந்த அதிசய அனுபவத்தை உலகமே தொலைக்காட்சியில் கண்டு வியந்தது. அமெரிக்காவின் தேசிய கொடியை நட்டி பறக்க விட்டனர்.


எப்பொழுது கண்டாலும் மனிதனின் மனதிற்கு இதமான அனுபவத்தைத் தரும் நிலவில் மனிதன் கால் பதித்து நடந்த அந்த விஞ்ஞான சாதனை, அதன்பிறகு இன்று வரை நடந்து வரும் எல்லா விண்வெளி ஆய்வுகளுக்கும் ஒரு முன்னோடியாக அமைந்தது.

நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட "நிலா கல்" உலகம் முழுவதும் வலம் வந்தது. உலக மக்கள் அனைவரும் தாங்கள் வாழும் பூமியை நாளும் சுற்றி வரும் நிலவின் ஓர் அங்கத்தை ஆச்சரியத்துடன் கண்டனர்.

நிலவில் என்னென்ன கனிமங்கள் இருக்கும்? அது எப்படி நமது பொருளாதாரத்திற்கும், முன்னேற்றத்திற்கும் பயன்படும் என்கின்ற திட்டங்களோடுதாடுதான் நிலவை நோக்கி அந்த விஞ்ஞான முயற்சி திட்டமிடப்பட்டதாம்.

அதே நேரத்தில் ரஷ்யாவும் சயூஸ் என்கின்ற தனது ஆளில்லா விண்கலத்தை நிலவின் மற்றொரு பகுதியில் இறக்கி அங்கு ஆய்வு நடத்திவிட்டு சில விவரங்களுடன் திரும்பியது.

இந்த முதன்மை பயணத்திற்குப் பிறகு பல முறை அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் நிலவிற்கு அனுப்பப்பட்டனர். நிலவில் அவர்கள் கார் ஓட்டினர். நீண்ட நேரம் இருந்தனர். பல ஆராய்ச்சிகளை செய்தனர். பின் மீண்டும் நான்கு நாட்கள் பயணம் செய்து புவியை அடைந்தனர்.

                                               அன்புடன் உங்கள் ,




                                                     
                                                           

No comments:

Post a Comment