Friday, August 5, 2011

தாமஸ் ஆல்வா எடிசன்

 
தாமஸ் ஆல்வா எடிசனின் வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர், "வீட்டு வெளிப்புறத்தில், சுழல் கதவை வைத்திருக்கிறீர்களே? ஒவ்வொரு முறையும் அதைச் சுற்றி விட்டு, உள்ளே வந்து போவது மிகவும் சிரமமாக இருக்கிறதே... ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள்? இதில் ஏதாவது ரகசியம் இருக்கிறதா?' என்று கேட்டார்.
சிரித்தபடியே எடிசன், "இதில் ரகசியம் ஒன்றுமில்லை! அந்தக் கதவை நீங்கள் ஒருமுறை சுற்றினால், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள இயந்திரத்தை இயக்குகிறது. அந்த இயந்திரம் எட்டு லிட்டர் தண்ணீரை என் தோட்டத்துத் தொட்டியில் நிரப்பிவிடும்! அவ்வளவுதான்!' என்றார்.

1 comment:

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete