Sunday, August 7, 2011

அப்பல்லோ 14

 

Crew 

Commander - Alan B. Shepard, Jr.Second spaceflight , 

Command Module Pilot - Stuart A. Roosa Only spaceflight ,

Lunar Module Pilot - Edgar D. Mitchell Only spaceflight

Backup crew :-

Commander - Eugene A. Cernan 

Command Module Pilot - Ronald E. Evans, Jr. 


Lunar Module Pilot - Joseph H. Engle


அலன் பார்ட்லெட் ஷெப்பர்ட் (Alan Bartlett Shepard) நவம்பர் (18 1923 – ஜூலை 21 1998 ) விண்வெளிக்குச்சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவதுஅமெரிக்கரும் ஆவார். முதன் முதலாக மே 5 1961இல் மேர்க்குரி விண்கலத்தில் பயணம் செய்து மொத்தம் 15 நிமிடங்கள் பூமியின் சுற்று வட்டத்தில் சுற்றித் திரும்பினார். பின்னர் 1971 இல் தனது 47வது அகவையில் அப்பல்லோ 14 விண்கலத்தில்சந்திரனுக்கு சென்று சந்திரனில் நடந்த 4வது மனிதர் ஆனார்.

'அப்பல்லோ 14 ' உபரிதகவல்கள் :-
 

வாஷிங்டன் : 1971 ல் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட அப்போலோ 14 விண்கலத்தின் பயணக்குழுவில் இடம் பெற்றிருந்தவர் எட்கர் மிட்சேல். அந்த பயணத்தின் போது இவர் ரகசியமாக காமிரா ஒன்றை எடுத்துச்சென்றதாகவும் அதனை பயன்படுத்தி சில அபூர்வ காட்சிகளை படமெடுத்து வந்து தற்போது அந்த கேமராவை ஒரு இங்கிலாந்து நிறுவனத்திற்கு விற்று விட்டதாகவும் அவர் மீது அமெரிக்காவின் நாசா அமைப்பு  கடந்த ஜூலை 2011 குற்றம் சாட்டியுள்ளது. 

இது சட்ட விரோதமான செயல் என்று கூறிய அமெரிக்க அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த கேமராவை மிட்சேல் 60 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் பவுண்டுகளுக்கு இங்கிலாந்தை சேர்ந்த போன்ஹாம் என்ற ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு விற்றிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் வெளியானதும் நாசா மிட்சேலிடம் அந்த கேமராவை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியது. மிட்சேல் அதற்கு மறுக்கவே, அவர் மீது நடவடிக்கை துவங்கியுள்ளது. இருப்பினும் அவரது வழக்கறிஞர், கேமராவை மிட்சேல் ரகசியமாக எடுத்து செல்லவில்லை என்றும் நாசாவுக்கு தெரிந்தே தான் அவர் கேமராவை எடுத்து சென்றிருந்தார் என்றும் கூறியுள்ளார். 
  
                                                            அன்புடன் உங்கள்
                                               ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

No comments:

Post a Comment