Sunday, September 18, 2011

ஆபிரகாம் லிங்கனும் கென்னடியும்.






ஆபிரகாம் லிங்கனும் கென்னடியும் எப்படி இறந்தனர்?

இந்த பதிவு நிச்சயம் உங்கள் புருவங்களை உயர்த்தும். அமெரிக்க அதிபர்கள் ஆபிரகாம் லிங்கன்,கென்னடி ஆகிய இருவருக்கும் பலவிதங்களில் ஒற்றுமை இருக்கிறது.


இது  குறித்து சிலர் ஏற்கனவே படித்திருக்கலாம், இருப்பினும் மீண்டும் ஒரு மீள்பார்வை..

ஒரு வரலாறு நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடைப்பெற்றக் கதையிது!


ஆபிரகாம் லிங்கன் 1846-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சான் எஃப். கென்னடி 1946-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.


ஆபிரகாம் லிங்கன் 1860-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சான் எஃப்.கென்னடி 1960-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.


இவர்களிருவரும் குடிமக்களின் உரிமைகளில் அதிக கவனம் செலுத்தியவர்கள்.


இவர்களிருவரின் மனைவிமார்களும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வாசம் செய்த காலத்தில்தான் தங்கள் பிள்ளைகளை இழந்தனர்.


இவ்விரு அதிபர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாள் வெள்ளிக் கிழமையாகும்.


இவ்விருவருமே தலையில் சுடப்பட்டு இறந்தனர்.


ஆச்சரியமாக இருக்கிறதா...?



லிங்கனின் செயலாளரின் பெயர் கென்னடி.

கென்னடியின் செயலாளரின் பெயர் லிங்கன்.


இவ்விரு அதிபர்களுமே தென் மாநிலங்களைச் சார்ந்த நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.


லிங்கனுக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற அண்ட்ரூ சான்சன் 1808-ஆம் ஆண்டில் பிறந்தவாராவார்.

கென்னடிக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற லிண்டன் சான்சன் 1908-ஆம் ஆண்டில் பிறந்தவராவார்.



லிங்கனைக் கொலைச் செய்த சான் வில்க்ஸ் பூத் 1839-ஆம் ஆண்டு பிறந்தவராவார்.

கென்னடியைக் கொலைச் செய்த லீ ஆர்வீ ஓஸ்வெல்ட் 1939-ஆம் ஆண்டி பிறந்தவராவார்.



இவ்விரு கொலையாளிகளின் முழுப்பெயர்கள் ஒவ்வொன்றிலும் மூன்றுப் பெயர்கள் அடங்கியுள்ளன.

இவ்விரு கொலையாளிகளின் பெயர்களுமே 15 ஆங்கில எழுத்துகளால் அமைந்தவை.

(John Wilkes Booth , Lee Harvey Oswald)

என்ன, படிக்கப் படிக்க ஆச்சரியமாக உள்ளதா?

லிங்கன் - 'ஃபோர்டு' என்றழைக்கப்படும் ஒரு திரையரங்கில் கொல்லப்பட்டார்.

கென்னடி - 'ஃபோர்டு' நிறுவனம் தயாரித்த 'லிங்கன்' எனும் மகிழுந்தில் பயணம் செய்யும்போது கொல்லப்பட்டார்.

திரையரங்கில் லிங்கனைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.

கென்னடியைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கிலிருந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, பின் ஒரு திரையரங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.

இவ்விரு கொலையாளிகளும் (பூத், ஓஸ்வெல்ட்), நீதிமன்ற விசாரணைக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டனர்.



இங்குதான் சுவாரசியமே உள்ளது... மேலும் தொடர்ந்து படியுங்கள்..



லிங்கன் இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மான்றோ, மேரிலாண்ட் எனுமிடத்தில் இருந்தார்.

கென்னடி இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மர்லின் மன்றோ எனும் நடிகையுடன் இருந்திருக்கிறார்.

2 comments:

  1. இந்தத் தகவல்கள் அனைத்தையுமே நான் ஏற்கனவே படித்த ஞாபகம் இருக்கிறது. ஆனால்...நீங்கள் தொகுத்து வழங்கிய முறை அருமை...மீண்டும் மீண்டும் ஒரு சங்கதி தான் நினைவில் வந்து செல்கிறது...இவ்வளவு அரிய தகவல்களை..மிகவும் தேர்ந்த முறையில்..நேர்த்தியுடன் வழங்கியும்...(இந்த பகிர்வினை விட்டு விடுவோம்) இதற்கு முந்தைய கட்டுரைகளை எடுத்துக் கொண்டாலும்...பின்னூட்டங்களை கவனித்தீர்களா..!!!..மிகவும் சொற்பம்( இதன் உள் அர்த்தம் என்ன என்பது அனேகமாக உங்களுக்கு புரிந்திருக்கும்)..அதேதான்...!!! கவைக்குதவாத சங்கதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட பதிலுரைகள்..அருமை அற்புதம் என்று...அதே சமயம்..இது போன்ற அரிய, அறிவு பூர்வமான தகவல்களுக்கு...இது தான் தமிழ் கூறும் நல்லுலகம்..எங்கே, இதை விடுத்து..பேஸ்புக்கில்...ஒரு சர்ச்சைக்குறிய கட்டுரையினை...பதியுங்கள்...என்னா திட்டு திட்டுவாய்ங்க தெரியுமா..நீ...அதான் இப்படி எல்லாம்...இன்னும் சொல்லலாம்..தனிச் செய்திகளில் பல பகிர்வுகளை செய்கிறேன், இளைய சகோ...மிக்க மகிழ்ச்சி..:-)

    ReplyDelete
  2. நன்றி RSN அண்ணன், அது என்னவோ நீங்கள் சொல்வதும் உண்மைத்தான் .நீங்கள் என்னிடம் அடிக்கடி சொல்வீர்களே ''என் பணி செய்து கிடப்பதே'' அதே அண்ணன் என் பாணி .

    ReplyDelete