அருணா சாய்ராம்.
மே 12, 1960 அன்று பம்பாயில் பிறந்தார். அருணா சாய்ராமின் அப்பாவுக்கு பூர்வீகம் திருவாரூர். அம்மாவுக்கு திருச்சிராப்பள்ளி. திருமணதிற்கு பிறகு பம்பாயில் செட்டில் ஆகி இருந்தாலும், காலையில் ஏழுந்து பாடுவதிலிருந்து சமையல் வரைக்கும் எல்லாமே அவர்களின் வீடு முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக் கலாசாரம்தான். தமிழ்நாட்லிருந்து பம்பாய் செல்லும் கர்நாடக சங்கீத வித்வான்கள் , நாட்டியக் கலைஞர்கள் , பேச்சாளர்கள் , நாடகக் கலைஞர்கள் என எல்லா பிரபலங்களும் அருணா சாய்ராமின் வீட்டுக்கு செல்லாமல் இருக்கமாட்டார்கள் . அந்த அளவிற்கு அவரின் அம்மா, அப்பா இருவருக்கும் கலைகளில் ஆர்வம் இருந்தது. இவர்களின் வீடிற்கு தவறாமல் விஜயம் செய்யும் ஜாம்பவான்களில் அரியக்குடி , மதுரை மணி, M.S. சுப்புலட்சுமி , பால சரஸ்வதி, T.R. மகாலிங்கம், கி.வா.ஜ என பட்டியல் நீண்டு கொண்டே போகும் .
அருணா சாய்ராம் நாலு வயது முதலே பாட தொடங்கினார். அவருக்கு கர்நாடக இசையில தாயார் ராஜலஷ்மி சேதுராமன் தான் முதல் குரு. நூறு வர்ணங்கள், நூறு கீர்த்தனைகள் என அருணாவின் பத்து வயது வரை கற்று கொடுத்தவர் . அருணா சாய்ராமின் பத்தாவது வயதில் சங்கீத கலாநிதி T. பிருந்தா அவர்கள் அருணா சாய்ராமின் வீட்லயே தங்கும்படியான ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது . அதற்குப் பிறகு முறையாக T. பிருந்தாவிடமும் , வீணை வித்வான் K. S. நாராயணசாமி, டைகர் வரதாச்சாரியாரின் சிஷ்யர் திரு. A.S. மணி, டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு. T. R. சுப்ரமணியம், திரு. S. ராமச்சந்திரன், பத்மபூஷண் பால முரளி கிருஷ்ணா ஆகியோரிடம் சங்கீதம் கற்று தேர்ந்தார் .
சங்கீத கலாரத்னா, சங்கீத கலாமணி... உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். தற்போது இவருக்குக் கிடைத்திருக்கும் ‘பத்மஸ்ரீ’ விருது இவருடைய இசைப் பணிக்குக் கிடைத்திருக்கும் மிக முக்கியமான விருது.
இவர் பாடியதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் .

No comments:
Post a Comment