Monday, August 1, 2011

ஸ்ரீ ரங்கரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி.



ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தேன் கங்கை
நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சல் குங்குமம் மங்கை நீ
சூடி தெய்வப் பாசுரம் பாடடி
(ஸ்ரீரங்க...)

கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அந்நந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நல் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்
கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மருவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன் வினை நஞ்சை புஞ்சங்கள் தானடி
ஊர் வஞ்சம் என்ன கூருவேன் தேவ லோகமே தானடி
வேரெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி


வரிகள் : வாலி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மகாநதி ஷோபனா, உமா ரமணன்

4 comments:

  1. கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
    கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்
    கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
    மங்கள நீராட முன்வினை தீர்க்கும்
    நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி
    ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தேவா லோகமே தானடி
    வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி ..
    ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
    ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி ..
    இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
    தென்றல் போல நீ ஆடடி
    மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
    தெய்வ பாசுரம் பாடடி ..அருமையான, மனதில் நிலைத்து நிற்கும் பாடல் இளைய சகோ...:-)

    ReplyDelete
  2. அருமையான பாட்டு. காவிரியின், ஸ்ரீ ரங்கத்தின் புகழ்.
    இன்று தான் முழுமையாக ரசித்து கேட்டேன். தேனாக இனிக்கிறது.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி ரத்னவேல் ஜி நல்வரவு !

    ReplyDelete